வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கபடாது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


வங்கி மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா..? என்று நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

நாட்டில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் வரை சுமார் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான 2,246 வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தெரிகிறது. அத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,347 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'வங்கி மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனியாகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் உத்தேசம் தற்போது ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இது குறித்து அவர்  மேலும் கூறுகையில், ‘தற்போதுள்ள நீதித்துறை கட்டமைப்புகளே போதுமானதாக உள்ளன; ஏற்கனவே, உயர்நீதிமன்றங்களின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆக புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்குப் பதிலாகத் தற்போதைய நடைமுறையே தொடரும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finance Minister Nirmala Sitharaman says that a special court will not be set up to investigate bank fraud cases


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->