ஜெயிலர்-2 யில் சந்தானமா...? கிசுகிசுவுக்கு நகைச்சுவையுடன் பதிலளித்த காமெடி ஸ்டார்...!
Santhanam Jailer 2 comedy star responded rumour humor
சின்னத்திரையில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சந்தானம், சிம்பு நடித்த ‘மன்மதன்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகளில் கலக்கிய அவர், காலப்போக்கில் கதாநாயகனாக உயர்ந்து தனித்த அடையாளம் பெற்றார்.

இந்த நிலையில், வெள்ளித்திரையில் தனக்கு முதல் வாய்ப்பை வழங்கிய சிம்புவின் அழைப்பை ஏற்று, அவர் நடிக்கவிருந்த புதிய படத்தில் சந்தானம் இணைவதாக பேசப்பட்டது.
ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.இதற்கிடையே, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்–2’ படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
இந்த வதந்தி குறித்து சந்தானத்திடம் கேட்கப்பட்டபோது, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அவர் பதிலளித்தார்.“எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
அது என்ன கள்ளக்காதலா… மறைத்து செய்ய? படம் தானே… சொல்லிட்டுத்தான் செய்வேன்,” என்று சிரிப்புடன் கூறி, ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்.
English Summary
Santhanam Jailer 2 comedy star responded rumour humor