நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.. அறிவிப்பை வெளியிட்ட கட்சி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், ஜிகே வாசன் குடியரசுதின விழாவான நேற்று தேசிய கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். 

அதன்பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடாக மாறவேண்டும் என்றால் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மக்களாகிய நாம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

கொரோனா பரவல் காரணம் காட்டி கிராமசபா கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மட்டும் அரசு ஏன் மறுக்கிறது. மேலும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMC alliance for aiadmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->