காரைக்குடியில் இருந்து முதல் முறையாக.. தவெக அமைச்சர் டி.கே.பிரபுவால் பெருமை கொள்ளும் ஊர் மக்கள்..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியிலிருந்து முதல் முறையாக தவெகவின் சார்பில் போட்டியிட்ட டி.கே.பிரபு இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 04 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை தொகுதியில் எம்எல்ஏக்களாக இருந்த தா.கிருஷ்ணன், ஜி.பாஸ்கரன் அமைச்சர்களாகவும், திருப்பத்தூர் தொகுதியில் எம்எல்ஏக்களாக இருந்த மாதவன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

ஆனால், காரைக்குடி தொகுதியிலிருந்து முதல் முறையாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது இத்தேவி முதல் முறையாகும்.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952-ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை 16 எம்எல்ஏக்கள் இருந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர்கூட இத்தொகுதியிலிருந்து அமைச்சராக நியமிக்கப்படவில்லை.

இந்த முறை தவெக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள டி.கே.பிரபு (42), அமைச்சராக இடம்பெற்றுள்ளார். இவர் தேவகோட்டை அருகே இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராக பணியாற்றுகிறார். இவரது தந்தை துரை.கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். தாயார் சரஸ்வதி, தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.  டி.கே.பிரபு தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

முதுகலை (Post Graduate) பட்டம் பெற்றவர். குறிப்பாக, இலங்கையின் கொழும்பு மற்றும் ஜெர்மனியின் கோதே பல்கலைக்கழகம் (Goethe University) ஆகியவற்றில் உயர்கல்வி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TK Prabhu of the TVK becomes the first person from Karaikudi to be appointed as a Minister


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->