கடும் சவால்! மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த நினைத்தவர்கள் அதிர்ச்சியில்...! - திட்டம் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதி!
Those who wanted stop women rights fund shock Udhayanidhi Stalin assures that project continue
திருச்சி மாவட்டத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரமான லால்குடியில், ‘கலைஞர் மேம்பாட்டு திட்டம்’ கீழ் ரூ.31.89 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ரூ.4.69 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு முக்கிய கட்டிடங்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த விழாவில் உரையாற்றிய அவர், “திருச்சி மாநகரத்திற்கு அடுத்தபடியாக மிக வேகமாக வளர்ச்சி அடையும் நகரம் லால்குடிதான். தமிழுக்கும், திராவிட இயக்கத்திற்கும் மூன்று அமைச்சர்களை அளித்த பெருமை இந்த மண்ணுக்கே சொந்தம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நெருங்கிய தோழரான முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் இந்தப் பகுதியின் பெருமை என்றும் தெரிவித்தார்.
மேலும், “திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மாநிலம் முழுவதும் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரமாக நடைமுறைக்கு வருகின்றன. விடியல் பயணம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன” என்றார்.
அவற்றில் முக்கியமாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இந்திய அளவிலும் கவனம் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களுக்கு சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்ற உறுதியையும் தெரிவித்தார்.லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் என்றும், புதிய பேருந்து நிலையத்தை மக்கள் சுத்தமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
English Summary
Those who wanted stop women rights fund shock Udhayanidhi Stalin assures that project continue