துரோகிகள் கூடாரம் திமுக! தூத்துக்குடி துப்பாக்கி சூடு குற்றவாளிகளை கட்டி அணைத்தது திமுக! அதிமுக நிர்வாகி ஆவேசம்!
Thoothukudi Gun Fire DMK Politics MK Stalin ADMK Kalyanasundram
அதிமுக நிர்வாகி கல்யாணசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "துப்பாக்கி சூடு நடந்த போது அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்தில் இருந்தேன். துப்பாக்கி சூட்டிற்கு தான் உத்தரவு கொடுக்கவில்லை என பலமுறை எடப்பாடியார் சொல்லிவிட்டார். தீர விசாரித்த பிறகு அதையேதான் நீதிபதியும் சொன்னார்.
நீதிபதி குற்றவாளிகள் என அடையாளம் காட்டியவரை கட்டி அணைத்தது திமுக.
அதுவரை தேர்தலில் நிற்கவே அஞ்சி நடுங்கிய கனிமொழியை அந்த தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது திமுக.
ஆட்சி அமைத்த பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைப்படி குற்றவாளிகளை தண்டித்திருக்க வேண்டும், அல்லது அந்த விசாரணயில் நம்பிக்கை இல்லையெனில் மீண்டும் விசாரணயை தொடங்கி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்திருக்க வேண்டும். செய்ததா திமுக?
இந்தக் கேள்விக்கு நேர்மையான பதில் சொல்ல ஒருவருக்கு திராணி உண்டா திமுகவில்??
துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் பதவி உயர்வு கொடுத்தது ஏன்? என்றால், அன்று அவர் யார் உத்தரவை வாங்கி சுட்டார்? யாருடைய அரசியல் வெறிக்கு அந்த துப்பாக்கி சூடு நடந்தது??
கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?? துரோகிகள் கூடாரம் திமுக" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Thoothukudi Gun Fire DMK Politics MK Stalin ADMK Kalyanasundram