''முதல்வராவது என் கனவு அல்ல; பீஹார் வளர்ச்சியடைவதை விரும்புகிறேன். ''பிரசாந்த் கிஷோர்..!
Becoming the Chief Minister is not my dream I want Bihar to develop Prashant Kishor
பீகாரில் பாஜ கூட்டணியில் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பாஜ கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இதனால் இரு கட்சிகளும் பல வியூகங்களை வகுத்து தேர்தல் வேலைகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீகாரில் மக்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது:- ‘சிலர் நான் முதல்வராக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல்வர்களை உருவாக்க முயற்சித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பை செய்கிறேன் என்றும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும்போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Becoming the Chief Minister is not my dream I want Bihar to develop Prashant Kishor