ஜூன் 02-இல் பள்ளிகள் திறக்கப்படுமா.. இல்லையா..? தொடக்கக்கல்வி இயக்குனர் கூறிய தகவல்..?
Will schools open on June 2nd
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 02-ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில்அளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:- ''இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 02-ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். ஆனால், அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தாக்கம் இருந்தாலும், பல இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்றே குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் முன்னறி அறிவித்தபடி, ஜூன் 02-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசு - அரசு நிதி உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Will schools open on June 2nd