அமிர்தசரஸின் கந்த்வாலாவில் கோவில் மீது கையெறி குண்டு தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் கைது..!
Two Khalistani terrorists arrested for grenade attack on temple in Khandwala Amritsar
கடந்த மார்ச் மாதம் அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர் . அப்போது கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த குண்டுவீசி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பகவந்த் சிங் நேற்று அமிர்தசரஸில் உள்ள அகல்கர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தன்படி, இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Two Khalistani terrorists arrested for grenade attack on temple in Khandwala Amritsar