திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மலை உச்சியில் தர்கா நில உரிமை குறித்து வக்பு வாரியம் வாதம்!
thiruparankundram issue Waqf Board High Court Madurai Bench
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் வக்பு வாரியம் சார்பில் வழக்கறிஞர் அப்துல் முபின் ஆஜராகி வாதாடினார்.
தர்கா உரிமை மற்றும் பாதை: வக்பு வாரிய வழக்கறிஞர் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
தர்கா இருப்பிடம்: மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா அமைக்கப்பட்டு, அதன் அருகில் தொழுகை நடப்பது வழக்கமாக உள்ளது. இதனால் மலையை சிக்கந்தர் மலை என்றும் கூறுகின்றனர்.
நிலங்கள்: நெல்லித்தோப்பு, அதன் பாதைகள் மற்றும் அங்கு செல்லும் படிகட்டுகள் ஆகியவை தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் என ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பழக்க வழக்கம்: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை.
தர்காவும் மலையின் பின்பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. பக்தர்களும் இஸ்லாமியர்களும் குதிரைச்சுனை அருகில் இருந்து இருவேறு பாதைகளில் வந்து செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு:
1921-ஆம் ஆண்டில் சிவில் நீதிமன்றம் தர்காவுக்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவை பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், தலையிடக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவில் இந்த விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
நீதிபதிகள், தர்கா நிலங்கள் முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா என்றும், இது தொடர்பான உறுதியான ஆவணங்களை தாக்கல் செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர். ஆவணங்கள் இருப்பதாகவும், அவற்றை நாளை (டிசம்பர் 16) தாக்கல் செய்வதாகவும் வக்பு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
English Summary
thiruparankundram issue Waqf Board High Court Madurai Bench