முதலமைச்சராக எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் குமுறல்!
thirumavalavan vck Alliance DMK MK Stalin
ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அதில், “இந்து மதத்தை விமர்சிக்கிறீர்கள் என்று சொல்பவர்கள் இருக்கின்றனர். நாங்கள் மதத்திற்கு எதிராக பேசவில்லை. சகோதரத்துவம் இல்லாத சமூக அமைப்பை விமர்சிக்கிறோம்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தங்களது நிலைப்பாட்டை சுய பரிசோதனை செய்ய தயங்குகின்றன. மதச்சார்பின்மை கோட்பாட்டில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலின் பேசினால் சனாதனம் விவாதமாகும்; ஆனால் அதே கருத்தை நான் சொன்னபோது பிரச்சனை இல்லை. எங்கள் விமர்சனம் இந்து மக்களுக்கு எதிரானதல்ல. கருத்தியலுக்கு எதிரானது.
தமிழகத்தை பாஜக-வுடன் சேர்ந்து காப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் மதச்சார்பின்மையை காப்போம் என்பதே நமது நோக்கம்.
பாஜகவின் பார்ப்பன நிழல்களில் இருந்து சமூக நீதி அரசியலை காப்பது எங்கள் நோக்கம். துணை முதல்வர் பதவிக்காக யாரும் அழைக்கவில்லை. அழைத்தால் போவதா என்பதே கேள்வி. நான் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவனா? 35 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். எனக்கு அந்த தகுதி இல்லையா.
சங்ப் பரிவருக்கு தமிழகத்தில் இடம் கொடுக்க கூடாது என்பதற்காவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் உறுதியாக நிற்கிறது” என்றார்.
முன்னதாக என்னுடைய இலக்கு பிரதமர். முதலமைச்சர் என்று என்னை சுறுக்கிவிட வேண்டாம் என்று திருமாவளவன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துணை முதல்வர் பதவி என்பது பவர் இல்லாத ஒரு டம்மி பதவி என்பது போலவும் திருமாவளவன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
thirumavalavan vck Alliance DMK MK Stalin