காங்கிரசை விற்று திண்கின்றனர்! சீட்டு விற்பனை?காங்கிரசை இனி யாராலும் காக்க முடியாது..ஜோதிமணி அட்டாக்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில் கரூர் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இதுவரை 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில், ஜோதிமணி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:“காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. அனைத்தும் ரகசியமாக நடைபெறுகிறது. கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.கட்சிக்காக உழைக்காத சிலர் தற்போது எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது வேதனை அளிக்கிறது.”

மேலும்,“இதேபோல் ‘விற்பனை மனப்பான்மை’ கொண்டு வேட்பாளர் தேர்வும் நடந்தால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது”என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு வெளியானதும், காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளக முரண்பாடு வெளிப்படையாகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, யாரையும் நேரடியாக குறிப்பிடாதிருந்தாலும், இந்த விமர்சனம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை நோக்கி இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஜோதிமணியின் இந்த கருத்து அந்த உள்கட்சி பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து இதற்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகாத நிலையில்,
மீதமுள்ள தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு எவ்வாறு நடைபெறும்? என்பதே அடுத்த கட்ட அரசியல் கவனமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They are selling and eating the Congress Ticket selling No one can protect the Congress anymore Jothimani attack


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->