சட்டசபையில் பரபரப்பு...! எம்.எல்.ஏ சான்றிதழை மறந்துவிட்டு கோட்டைக்கு வந்த அமைச்சர் கீர்த்தனா! - அடுத்து நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றியைப் பதிவு செய்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவியேற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்று அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.எம்.எல்.ஏ சான்றிதல்

இந்த சூழலில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

முதலில் பெரம்பூர் தொகுதியில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினர்களும் வரிசையாக உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய உறுப்பினர்களை முதல்-அமைச்சர் விஜய் நேரில் வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரான கீர்த்தனா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதற்கான சான்றிதழை உடன் கொண்டு வராத காரணத்தால் அவையில் பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக மற்ற அமைச்சர்களுடன் இணைந்து அவர் உறுதிமொழி ஏற்க இயலவில்லை. தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அவர் தனியாக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There stir assembly Minister Keerthana came fort after forgetting his MLA certificate What happened next


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->