‘ராஜ்யசபா’ சீட்டுக்கு போட்டா போட்டி! அதிமுக, திமுக கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!
The Rajya Sabha Race DMK AIADMK Caught in an Alliance Crossfire
மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தற்போதுள்ள பலத்தின்படி திமுக-விற்கு 4 இடங்களும், அதிமுக-விற்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதி. ஆனால், சீட் கேட்டு கூட்டணிக் கட்சிகள் தரும் நெருக்கடியால் இரு தரப்பும் திணறி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பல போட்டிகள்!
அதிமுக-வின் இரண்டு இடங்களில் ஒன்று ஏற்கனவே பாமக-வின் அன்புமணி ராமதாஸிற்கு ‘ரிசர்வ்’ செய்யப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள ஒரே ஒரு இடத்திற்குப் போட்டியோ மிக அதிகம்:
தம்பிதுரை & ஜி.கே.வாசன்: தற்போதைய எம்.பி-க்களான இவர்கள் இருவரும் மீண்டும் வாய்ப்பு எதிர்பார்க்கின்றனர்.
டிடிவி தினகரன்: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், டெல்லி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக: ஒரு சீட் கிடைத்தால் மட்டுமே கூட்டணி என்ற பிடிவாதத்தில் உள்ளது.
இப்படி கூட்டணி தலைவலி தரும் இந்தச் சூழலில், ஜி.கே.வாசனைப் பாஜக கோட்டாவிற்குத் தள்ளவும், தேமுதிக பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக இழுத்தடிக்கவும் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
திமுக கழுத்தை நெறிக்கும் கூட்டணி!
திமுக-விற்கு உறுதி செய்யப்பட்டுள்ள 4 இடங்களில் திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். மீதமுள்ள 3 இடங்களுக்குக் கடும் போட்டி நிலவுகிறது:
காங்கிரஸ்: தனது வசம் 17 எம்எல்ஏ-க்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஒரு இடத்தை உறுதியாகக் கேட்கிறது.
தேமுதிக: 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்தால் உடனே திமுக கூட்டணிக்கு வரத் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
எது எப்படி ஆனாலும் இந்த ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் மற்றும் இதில் எடுக்கப்படும் முடிவுகள், வரவிருக்கும் 2026 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றக்கூடும்.
English Summary
The Rajya Sabha Race DMK AIADMK Caught in an Alliance Crossfire