பெவிலியனின் பயிற்சியாளருடன் உச்சகட்ட மோதலில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்; பாட்டிலை தூக்கி எரிந்த வீடியோ வைரல்..!
Pakistan captain gets into heated argument with pavilion coach
டி20 உலகக் கோப்பை தொடரின் 35 ஆட்டம் இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வாழ் சாவா என்ற போராட்டத்தில், பாகிஸ்தான், நமீபியா அணியுடன் மோதியது. இறுதியில், போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்க்சில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளமை கேமராவில் பதிவாகியுள்ளது.து.
போட்டியில் அதிரடியாக விளையாட முயன்ற சல்மான் அலி ஆகா, 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பினார். அப்போது அவரது ஷாட் தேர்வைக் குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ கூறுகிறார்.
அப்போது ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தார். இந்த காட்சிகள் நேரலையில் கேமராக்களில் பதிவாகியுள்ளன.
லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டி அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இந்த வாக்குவாதத்தில் போது சல்மான் பக்கத்தில் அமர்ந்திருந்த முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அமைதியாக அமர்ந்திருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
English Summary
Pakistan captain gets into heated argument with pavilion coach