அதிர்ச்சி வீடியோ: பெண்களை திமுக அரசு எந்த அளவிற்கு கீழ்த்தரமாக நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி - வானதி சீனிவாசன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விடியா திமுக அரசில் மகளிருக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால் மகளிர் பயணம் செய்யும் கட்டணமில்லா விடியல் பேருந்தில் மரியாதையும் இல்லை.

காங்கேயத்தில் மகளிர் விடியல் பயணம் என்று வெற்று விளம்பரம் செய்யும் மக்கள் விரோத திமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறையில் பயணம் செய்த மகளிரை உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல் அரை கிலோ மீட்டர்தானே நடந்து போங்க என்றும், உரிய பயணச் சீட்டை வழங்காமல் அபராதம் கட்டுங்க என்றும் போக்குவரத்துறை ஊழியர்கள் கூறியதாக அப்பெண்கள் கூறுவது பெண்களை இந்த அரசு எந்த அளவிற்கு கீழ்த்தரமாக நடத்துகிறது என்பதற்கு சாட்சி.

மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று கூறிவிட்டு ஓசி பயணம் என்று அசிங்கப்படுத்துவதும், உரிய நிறுத்தங்களில் இறக்கி விடாமல் அலைக்கழித்து மரியாதைக்குறைவாக நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுதான் உங்கள் விடியல் பயணமா முதல்வர் அவர்களே..?

பெண்களின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கும் இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு இந்தத் தேர்தலில் பெண்களாகிய நாம் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவோம்.  சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Vanathi sinivasan condemn to DMK govt vidiyal payanam mk stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->