சிவம் தூபேவின் அதிரடி; வருணின் சுழலில் வீழ்ந்த நெதர்லாந்து; 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா..! - Seithipunal
Seithipunal


10 வது ஐசிசி ஆடவர்களுக்கான டி 20 உலக கோப்பை தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குரூப் A பிரிவில், 03 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 08 சுற்றை இந்திய அணி உறுதி செய்துள்ளது. இன்று 04 வது லீக் போட்டியிலும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவுக்கு பதிலாகவும், அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் விளையாடினர்.

அதன்படி, இன்று குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா - நெதர்லாந்து போட்டி நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில், டாஸ்வென்ற இந்திய அணி முதலில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 3-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து வந்த திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடியதில், திலக் 27 பந்தில் 31 ரன்னிலும், சூர்யகுமார் 28 பந்தில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஷிவம் துபே - பாண்ட்யா ஜோடி அபாரமாக ஆடினர். இதில், துபே அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ரிங்கு சிங் 06 ரன்களில் களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 03 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத் 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

194 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார். இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மாத்திரம் எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி சார்பில், வருன் சக்கரவர்த்தி 03 விக்கெட்டுகளையும், சிவம் தூபே 02 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக சிவம் தூபே தேர்வு செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India beats Netherlands by 17 runs in T20 World Cup


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->