விஜய்யின் தவெகவுடன் கூட்டணிக்கு தயாராகும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..? - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காரைக்கால் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, என்.ஆர். காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தேசிய ஜனநாயகக் கட்சி தயாராகியுள்ளது. அதன்படி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ், சில தொகுதிகளை மாற்ற முடிவெடுத்துள்ளதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திடீரென சந்தித்துள்ளார். நிர்வாகிகள் இன்றி நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமரின் வருகை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் போது, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியை சேர்க்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி கூட்டணியில் சேர்த்தால் விஜய்யின் தவெகவுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவுடன் சேர்ந்து புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Chief Minister Rangasamy preparing for alliance with TVK


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->