இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்ககளை பயன்படுத்த தடை; மத்திய அமைச்சர் தகவல்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது.

இதேபோன்று இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அதிக சமூக வலைதளங்களால் மூழ்கியுள்ள குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது குறித்து உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுடனும் கலந்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். சமூக வலைதளங்களால் நாளுக்கு நாள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அத்தகைய தீங்குகளில் இருந்து குழந்தைகள் மற்றும் சிறாரை காக்க வேண்டியது நமது அவசியம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister announces ban on social media use by those under 16 in India too


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->