ஒருபுறம் போராட்டம்; மறுபுறம் எதிர்க்கட்சிகள் அமளி துமளி; 02 வது நாளாகவும் முடங்கிப்போன பாராளுமன்ற கூட்டத்தொடர்..!
The parliamentary session was paralyzed for the second day due to the chaos of the opposition parties
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று (20ஆம் தேதி), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். இதனை காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு தரப்பிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

இவ்வாறு நீட் வினாத்தாள் மோசடி, இளைஞர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் 02 அவைகளும் இரண்டாவது நாளாக இன்று முடங்கியுள்ளன.
நேற்று திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், எவ்வித அலுவல் பணிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதேப்போன்று இரண்டாவது நாள் நாடாளுமன்றம் கூடியதும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இரண்டு அவைகளும் முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரினர்.
இதனை தொடர்ந்து அவை 02 மணிக்கு கூடியது. அப்போது நாடாளுமன்ற விதிப்படி, பேனர்கள், கருப்பு உடைகளுடம் வரக்கூடாது என கூறிய மக்களவை நடத்திக் கொண்டிருந்த திலீப் சைக்கியா, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோன்று, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
The parliamentary session was paralyzed for the second day due to the chaos of the opposition parties