அடுத்த சோதனை இந்த அமைச்சர் வீட்டில் தான் - ஹச்.ராஜா அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் போக்கிற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஹெச். ராஜா கருப்பு சட்டை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,பல்லாயிர கோடி ரூபாய்க்கு கிராவல் மண்களை எடுத்து வித்த குற்றவாளி தான் அமைச்சர் பொன்முடி என்று குற்றம் சாட்டினார்.

மேலும் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து அடுத்து கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்காமல் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள சென்றுள்ளார் என்றார்.  தக்காளி விவசாயிகள் படும் பாடு அதிகம்.

எனவே 40 ரூபாய்க்கு கீழே தக்காளி விலை குறைந்தால்  தான் தக்காளி வாங்குவோம் என்கிற முடிவை எடுக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளி விலை தானாக குறையும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The next ed raid is at this minister house- H Raja shock news


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->