எதிர்க்கட்சி தலைவர் யார்..? சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியை இழந்து எதிர் கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுவதோடு, தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்கத் திமுக இடையூறு செய்யாது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், சட்டசபையில் திமுகவின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The meeting of DMK MLAs has commenced at Anna Arivalayam in Chennai


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->