#BREAKING || சரவணா கோல்டு பேலஸ், லாட்டரி மார்டினின் சொத்துக்கள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


லாட்டரி மார்டினின் ₹173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

லாட்டரி எஸ் மார்டினுக்கு தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கின் கீழ் மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை தற்போது இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

173 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதற்கிடையே  சரவணா கோல்ட் பேலஸ் கடையின் சொத்துக்களையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரில்  சரவணா கோல்ட் பேலஸ் கடையின் சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Enforcement Directorate has frozen Saravana Gold Palace store in Chennai AND Lottery Martins assets


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->