அய்யோ பாவம்! பாஜகவுக்கு இது பேரிழப்பு! உச்சு கொட்டும் I.N.D.I.A கூட்டணி! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டுள்ளதை அதிமுகவினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தலைமையிலான அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

பாஜக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியிடப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியை சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் இது அதிமுக பாஜகவின் தேர்தல் நாடகம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகார் மாநில துணை முதலமைச்சரும், ஜனதா தளம் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில் ''இந்தியாவிலேயே பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான அதிமுக வெளியேறி உள்ளது. இது பாஜவுக்கு மிகப்பெரிய இழப்பு. ஏற்கனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றதாகி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒற்றை சர்வாதிகாரிகள் அமர்ந்துள்ளார். இருவரை நாட்டை இயக்குகிறார்கள். இது அவர்கள் பிரச்சனை. அது பற்றி இதற்கு மேல் நான் அதிகம் பேச விரும்பவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவாக உள்ளது" என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TejashwiYadav says that AIADMK exit from BJP alliance is disaster


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->