2026 தேர்தலில் 200 தொகுதி இலக்கு…கூட்டணி கட்சிகளுக்கு இவ்வளவுதான் சீட்..ஸ்டாலின் டேபிளில் ரெடியான லிஸ்ட்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக 200 தொகுதிகளை இலக்காக வைத்து தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்து திமுக தலைமை உத்தேச பட்டியலை தயாரித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு தோல்வியடைந்த தொகுதிகளில், இந்த முறை திமுகவே நேரடியாக போட்டியிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதால், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதனை நோக்கி முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவும், கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த முறை வெற்றிபெறவும் ஸ்டாலின் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை திமுகவில் இணைக்க வேண்டும் என்ற பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, சமீப நாட்களில் மைத்ரேயன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் திமுகவில் இணைந்துள்ளனர். கிளை கழக நிர்வாகிகள் அளவிலும் திமுகவுக்கு இடம்பெயர்வு தொடர்கிறது.

இந்த நிலையில், திமுக தயாரித்து வரும் முதற்கட்ட உத்தேச பட்டியலின்படி, சுமார் 170 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த முறை போலவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுகவுக்கு தலா 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும், தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் போன்றோர் கூட்டணியில் இணைந்தால் அவர்களுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த உத்தேச பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, வரும் மாதங்களில் திமுக கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Target of 200 seats in the 2026 elections This is the number of seats for coalition parties Stalin has a ready list on his table


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->