சென்னையில் துப்பாக்கியுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி கைது.!!
TamilNadu Youth Congress Party Chief General Secretary arrested
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மைச் செயலாளராக இருக்கும் அஸ்வத்தாமன் இன்று சென்னை அடுத்த பூந்தமல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வந்த அஸ்வத்தாமனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்துள்ளனர்.

மீஞ்சூரில் உள்ள தனியார் நிதி நிறுவன அதிகாரியை துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனியார் நிதி நிறுவன அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மைச் செயலாளர் அஸ்வத்தாமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TamilNadu Youth Congress Party Chief General Secretary arrested