விஜய்க்கு தமிழிசை விடுத்த 'திடீர்' வேண்டுகோள்...! - தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு...!
Tamilisai sudden request Vijay next stir Tamil Nadu politics
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் வலுவாக நிலவி வருகிறது.

அதேசமயம், உருவாகும் ஆட்சி நிலைத்தன்மையுடனும் மக்கள் நம்பிக்கையை தாங்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அரசியல் வட்டாரங்களுக்கு அக்கறை இருப்பது தெளிவாக தெரிகிறது. அதற்கான அரசியல் நகர்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவது மறுக்க முடியாத உண்மை.
மக்களின் தீர்ப்பு மதிக்கப்படுவதால் தான் பல்வேறு அரசியல் வாய்ப்புகளும் ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தகைய முக்கியமான அரசியல் சூழ்நிலையை அமைதியாகவும் முதிர்ச்சியுடனும் அணுக வேண்டிய நேரத்தில், சிலர் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவது கவலை அளிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு ஒருவர் பிளேடால் தன்னை காயப்படுத்திக் கொண்ட சம்பவமும், வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வுகளாகும்.
எனவே, விஜய் உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு அமைதியை வலியுறுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அவருக்கு வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், எந்தவித ஆபத்தான முடிவுகளுக்கும் செல்லக்கூடாது என்றும் அன்புடன் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilisai sudden request Vijay next stir Tamil Nadu politics