'முதல்வர் விஜய், இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளியில் வரவில்லை'; தமிழிசை சௌந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளிய வராத மாதிரி தோன்றுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது கூறியதாவது;

விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, மற்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை பெறுகின்ற ஆர்வம், மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதில் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருவள்ளுவர் காவி நிறம்தான் உடுத்தியிருக்கிறார்; திருநீறு தான் வைத்திருந்தார். ஆரம்ப கால புத்தகங்கள் எல்லாம் இதைத்தான் உருவகப்படுத்தி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதோடு, நூலகத்துக்கு சென்று பாருங்கள் அங்கு 60, 70 வருடங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் காவியுடை தான் அணிந்து இருக்கிறார். இதுதான் அசல் என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து தமிழிசை பேசுகையில், பாஜக மக்களால் நிராகரிக்கப்படவில்லை. ஒரு சின்ன பின்னடைவுதான் என்றும், நிச்சயமாக நாங்கள் மீண்டு வருவோம். தமிழகத்தில் பாஜகவுக்கு தனி இடம் உண்டு என்று கூறியுள்ளார். அத்துடன், நாங்கள் மக்களுக்காக பேசுவர்கள். இன்று அரசியல் சூழல் மாறியிருக்கிறது. முதல்வரே தோற்கக்கூடிய நிலை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்று திருச்சி சென்றிருந்த முதல்வர் விஜய், இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளிய வராத மாதிரி தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். விஜய் தற்போது முதல்வர் ஆகிவிட்டார்; மக்கள் உங்கள் வாய்ப்புகளை கொடுத்திருக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள் என்று தமிழிசை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai Soundararajan remarks that Chief Minister Vijay has not yet emerged from election campaign mode


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->