நீட் தேர்வால் உயிர் போவதை கொண்டாடுகின்றனர்.!! ஆளுநர் தமிழிசை காட்டம்.!!
Tamilisai criticized TNgovt for opposing NEET exam
நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது "எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆளுநரை வேண்டுமென்றே விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த பொறுப்புக்கு என ஒரு மரியாதை அளிக்க வேண்டும். முதலமைச்சர்தான் விமர்சனம் என்ற பெயரில் தூண்டி விடுகிறார். ஆளுநரை தரக்குறைவாக விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
முதல்வரும் ஆளுநர் அமர்ந்து பேச வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், ஆளுநர் மீது விமர்சனம் செய்யாதீர்கள் என தனது கட்சியினருக்கு முதல்வர் கட்டளை இட வேண்டும். ஒரு ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. ஆனால் நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் நீட் தேர்வை முழுமையாக ஆதரிக்கிறார்.
அவருடைய அம்மா தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வை வாங்கிக் கொடுத்தார். உயிரைக் காக்கும் மருத்துவத் தொழிலை படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உயிரைப் போக்குவது எப்படி சரியாக இருக்கும். உயிரைப் போக்குவதை இங்கு கொண்டாடுகின்றனர், அது மிகவும் கவலை அளிக்கிறது" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Tamilisai criticized TNgovt for opposing NEET exam