பாஜக அலையில் சிக்காத தமிழகம்!டில்லிக்கே ராஜானாலும்..தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?
Tamil Nadu not caught in the BJP wave Even though Delhi is the king why has the BJP not been able to win in Tamil Nadu for 50 years
பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி அதிரடி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா முழுவதும் பாஜகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 1655 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சியாக பாஜக பெருமை தெரிவித்து வருகிறதாலும், தமிழகத்தில் மட்டும் அந்த கட்சிக்கு நிலை பிடிக்க முடியாதது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேசப்படும் விடயமாகி உள்ளது.
காங்கிரஸ் ஒருகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. ஆனால் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் எழ முடியாத நிலையில் உள்ளது. ஆனால் பாஜகவின் நிலை இன்னும் மோசம். 1980களில் தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை, தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்க எம்எல்ஏ கூட பெற முடியாத நிலைதான் நீடிக்கிறது.
நாடு முழுவதும் 2014 முதல் 2024 வரை ‘மோடி அலை’ வீசியும், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது.
2014ல் ஒரு இடம், 2019ல் 4.5% வாக்குகள் மட்டுமே, 2024ல் 11% வாக்கு இருந்தும் பூஜ்ஜியம்— இது தமிழக வாக்காளர்கள் தேசிய-மத அரசியலை ஏற்க மறுப்பதற்கு மிகப்பெரிய சான்று என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகம் பாஜகவுக்கு எப்போதும் சவாலான மாநிலம். திராவிட அரசியல், தமிழ் மொழி உணர்வு, வடஇந்திய கலாச்சார திணிப்புக்கு எதிர்ப்பு, இந்துத்துவ அரசியல் மீதான நம்பிக்கையின்மை போன்றவை பாஜக வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே முடக்கியுள்ளன. அரசியல் கூட்டணிகளில் இருந்தாலும், பாஜக தனிப்பட்ட வாக்கு வங்கியை உருவாக்க முடியாததே அதன் மிகப்பெரிய பின்னடைவு.
பாஜக தற்போது தமிழ் கலாச்சாரம், தமிழ் அடையாளம் ஆகியவற்றை முன்வைத்து இளைஞர்களை ஈர்க்க முயற்சி செய்தாலும், தமிழர்களிடம் கட்சியின் மீதான அடிப்படை நம்பிக்கையே இன்னும் உருவாகவில்லை. இதனால், பல மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் சக்திவாய்ந்த கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பாஜக இன்னும் ‘உள்வாங்கப்படாத கட்சி’ என்ற அடையாளத்திலேயே உள்ளது.
அதனால்தான் அரசியல் பார்வையாளர்கள் ஒரே வரியில் சொல்கிறார்கள்: இந்திய அரசியலில் பாஜக சக்திவாய்ந்தது; ஆனால் தமிழக அரசியலில் அதற்கு இன்னும் நீண்ட பாதை தான் உள்ளது.
English Summary
Tamil Nadu not caught in the BJP wave Even though Delhi is the king why has the BJP not been able to win in Tamil Nadu for 50 years