நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று சட்டபையில் பதவிப்பிரமாணம் செய்தநிலையில், முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் நேற்று சந்தித்து ஆசிபெற்று வருகிறார். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்தார். அப்போது ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்ற நிலையில், சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

அதன் பின்னர் சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய, முதல்வர் ஜோசப் விஜய் அங்கிருந்து புறப்படுகையில் வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Chief Minister Joseph Vijay personally meets NTK Coordinator Seeman and seeks his blessings


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->