'Dravidian Stock' எனக் கம்பு சுழற்றிய முதல்வர் ஸ்டாலினின் கருத்தென்ன? 'சனநாயகன்' விஜய் வாய் திறப்பாரா? நாதக நிர்வாகி விளாசல்! - Seithipunal
Seithipunal


நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது எனும் உண்மையை ஏற்க மறுத்து கன்னடர்கள் சண்டித்தனம் செய்வது குறித்து, திமுக மட்டுமில்லை, தவெகவும் வாய்திறக்கவில்லை.

அறிக்கைப்போர் நிகழ்த்தி வந்த விஜய், இவ்விவகாரத்தில் மௌன விரதம் இருப்பதற்கு ஒற்றைக்காரணம்தான்!

கன்னடர்களின் சனநாயக விரோதப்போக்குக்கு எதிராக வாய்திறந்தால் 'சனநாயகன்' கர்நாடகத்தில் ஓடாதெனும் எச்சரிக்கையுணர்வுடன் கூடிய தொலைநோக்குப்பார்வைதான் அது!

கமல்ஹாசன் கூறியது உண்மையென்று தெரிந்தும் அவருக்குக் கண்டனம் தெரிவிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

மன்னிப்புக் கேட்காவிட்டால், படத்திற்குத் தடைவிதிப்போம் என மிரட்டுகிறார் அம்மாநில அமைச்சர் சிவராஜ்.

'Dravidian Stock' எனக் கம்பு சுழற்றிய முதல்வர் ஸ்டாலினின் கருத்தென்ன இவ்விவகாரத்தில்? ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்? இதில் திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடென்ன?

தமிழே கன்னடத்தின் தாய் எனும் வரலாற்று உண்மையை மறுத்து, கர்நாடகத்தில் சண்டித்தனம் செய்கிறார்கள் கன்னடர்கள். மூத்தத் திரைக்கலைஞர் கமல்ஹாசன் திரைப்படத்திற்குத் தடைவிதிப்போம் எனும் அளவுக்கு எல்லை மீறுகிறார்கள். கருத்துச்சுதந்திரத்திற்கும், படைப்புச்சுதந்திரத்திற்குமான அச்சுறுத்தல்; மிரட்டல் இது.

தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நிலவுவதாக திமுக ஆட்சிக்கு பாராட்டுப்பத்திரம் எல்லாம் வாசித்த நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் கருத்தென்ன இதுகுறித்து" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Kannadam issue DMK MK Stalin TVK Vijay NTK Idubavanam karthik


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->