நம்ம தமிழ் பசங்க போராட்டத்தில் மண்ணை போட்ட மும்பை இந்தியன்ஸ்: குஜராத்தை வீழ்த்தி, தகுதி சுற்று 02-க்கு முன்னேற்றம்: ரோகித் சர்மா சாதனைக்கு மேல் சாதனை..! - Seithipunal
Seithipunal


முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில்  வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியில், டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 05 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக அதிரடியாக ஆடி, ரோகித் சர்மா 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.  பேர்ஸ்டோ (47), சூர்யகுமார் யாதவ் (33),  திலக் வர்மா (25), நமந்தீர் 09 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து,அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 02 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 229 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் கில் 01 ரன்னில் ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸ் (20), வாஷிங்டன் சுந்தர் (48), சாய் சுதர்சன் (80), ரூதர்போர்டு (24), ஷாரூக் கான் (13) ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் திவேதியா 16 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  

இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 06 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 02-க்கு முன்னேறியுள்ளது. 

மும்பை சார்பில் போல்ட் 02 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா , கிளீசன், சான்டனர் , அஸ்வினி குமார் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். நாளை மறுநாள் நடைபெறும் தகுதி தகுதி சுற்று 02-ல் மும்பை அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய ரோகித் சர்மா இந்த போட்டியில் 02 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் (மொத்தமாக 02-வது வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இதையடுத்து ஐ.பி.எல். தொடரில் 7000 ரன்களை கடந்த 02-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி (8618 ரன்) உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai team defeated Gujarat team and advanced to Qualifier Round 02


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->