மும்பையில் ரூ.703 கோடிக்கு வீடு வாங்கியுள்ள நடிகை ஜூகிசாவ்லாவின் நண்பியுமான பெண் தொழில் அதிபர்..!
A female businesswoman has bought a house in Mumbai for Rs 703 crores
மும்பையை சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனியின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவருமான லீனா காந்தி திவாரி என்பவர் மும்பையில் ரூ.703 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.
மும்பையில் மதிப்பு மிக்க வொர்லியில் நமன் சனாவில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் ரூ.639 கோடி மதிப்பில், 02 வீடுகளை வாங்கியுள்ளார். அரபிக்கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள அந்த பிளாட்டுகள் 22,572 சதுர அடி கொண்டதாகும்.

சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் விலையாக கொடுத்து அந்த வீடுகளை லீனா காந்தி திவாரி வாங்கியுள்ளார். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை சேர்த்து அவர் வாங்கிய 2 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.703 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோடிகளை கொட்டி வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர் லீனா காந்தி திவாரி, பிரபல இந்திப்பட நடிகை ஜூகிசாவ்லாவின் நெருங்கிய தோழியாவார். சமீபத்தில் கோடாக் மஹிந்த்ரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், மும்பை வொர்லி நமன் சனாவில் ரூ.400 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A female businesswoman has bought a house in Mumbai for Rs 703 crores