திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி: தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு..!
Entertainment tax reduction for Tamil cinema films
திரைக்கு வரும் படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த இந்த கேளிக்கை வரை மிகவும் அதிகமாக உள்ளதால், வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் குறித்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாக திரைப்படத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வரியை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. அத்துடன், திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 08 சதவீதத்தில் இருந்து 04 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
English Summary
Entertainment tax reduction for Tamil cinema films