மோடியின் 3.0 ஓராண்டு கால நிறைவையொட்டி அமைச்சகங்களுக்கு புது உத்தரவு..!
New orders to ministries on completion of one year of Modi third term
பிரதமர் மோடியின் 3.0-வின் ஓராண்டு காலம் நிறைவு பெறவுள்ளது. இதாங்க பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்றிய அமைச்சகங்களுக்கும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து வருகிறது. எதிர்வரும் ஜூன் 09-ஆம் தேதியுடன் 11 ஆண்டுகாலம் நிறைவு செய்கிறது. இந்நிலையில், 3.0 ஒரு வருட நிறைவை கொண்டாடும் வேளையில், அனைத்து அமைச்சங்களும் தங்களது 11 ஆண்டுகளால செயல்திறனை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அமைச்சகங்களும் தங்கள் சாதனைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 11 ஆண்டு ஆட்சி காலத்தின் முழு சாதனைகளையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர்கள் ஒன்றிய அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் கையேட்டை உருவாக்குவார்கள் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூன் மாதத்தில் மட்டும், ஜூன் 05-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 09-ஆம் தேதி மோடி அரசின் 3.0-இன் ஒரு வருட நிறைவு, ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம், ஜூன் 25-ஆம் தேதி அவசரநிலை பிரகடனத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து நேற்றைய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று பிரதமர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
New orders to ministries on completion of one year of Modi third term