ஜப்பான் பாப் பாடகியுடன் மற்றுமொரு குழந்தை: சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்..! - Seithipunal
Seithipunal


ஜப்பான் பாப் பாடகியுடன் எலான் மஸ்க் மேலும் ஒரு குழந்தை பெற்றுள்ள சம்பவம் குறித்த தகவல்கள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது சர்ச்சைகள் வெளியாகி வருகிறது.

தற்போது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் குடும்பப் பிரச்னைகள் அதிகரித்துள்ளது. அதன்படி, 14 குழந்தைகளின் தந்தையான எலான் மஸ்க், ஜப்பானிய பாப் பாடகி ஆஷ்லே செயிண்ட் கிளேருடன் ஒரு குழந்தை பெற்றதாகவும், தனது விந்தணுவை யாருக்கும் தரத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 

அத்துடன், இது தொடர்பில் ஸ்ட்.கிளெய்ர் என்ற பெண் கூறியதாவது: இதில் தனது உதவும் மனப்பான்மையின் ஒரு பகுதியாகவும், மக்கள் குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற தனது நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-இல் எலான் மஸ்க் தனது முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்சனுடன் மகன் நெவாடா அலெக்ஸாண்டரைப் பெற்றார். அவர்களுக்கு மேலும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. கடந்த 2020-இல் பாடகி கிரைம்ஸுடன் முதல் குழந்தை பிறந்தது.

பின்னர் மேலும் இரு குழந்தைகளைப் பெற்றனர் என்றும், கடந்த 2021-இல், எலான் மஸ்க் தனது நிறுவனமான நியூராலிங்கின் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸுடன் இரட்டையர்களைப் பெற்றதாகவும், பின்னர் 2024-இல் மற்றொரு குழந்தையைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தாண்டில் ஸ்ட்.கிளெய்ர் என்ற பெண், எலான் மஸ்குடன் தனக்கு ரோமுலஸ் என்ற குழந்தை பிறந்ததாக அறிவித்தார். எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி மேலும் சில பெண்களை குழந்தைகளைப் பெற அழைத்ததாகவும், உலக மக்கள்தொகை குறைவதைத் தடுக்க ‘லீஜியன்’ (ரோமானிய படைப்பிரிவு) அளவுக்கு குழந்தைகளைப் பெற விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஸ்ட்.கிளெய்ர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk has another child with a Japanese pop singer


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->