பிலிம்பேர் விருது எனது கழிப்பறை கைபிடி.. ஆனால் பத்ம ஸ்ரீ விருது... அதிரவைத்த நடிகர் நசீருதீன் ஷா! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா ஒரு நேர்காணலில் பேசியவர், “ஒரு கதாபாத்திரத்துக்காக முழுமையாக தன்னை அர்ப்பணிக்கும் நடிகர் என்றாலே, அவர் ஒரு சிறந்த நடிகர். ஆனால், ஒருவர் சிறந்தவர், மற்றவர் இல்லை எனத் தேர்வு செய்வது எந்த அளவுக்கு நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு Filmfare விருதுகளை பெற்ற ஷா, அவை தற்போதெல்லாம் தனக்குப் பெரிதாக மதிப்பற்றவையாகிவிட்டதாக கூறினார். குறிப்பாக, தனது பண்ணை வீட்டில் உள்ள கழிப்பறைகளில், Filmfare கோப்பைகளை கைப்பிடிகளாக பயன்படுத்தியதாகவும், விருதுகளை வாங்க செல்ல கூட விருப்பமில்லை என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

“விருதுகள் எனக்கு ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தன. ஆனால் பிறகு அது வெறும் விளம்பர நிழல்களாகவே தோன்றின. யாரும் உண்மையான தகுதியால் அல்லாமல், தாக்கம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் விருதுகளை பெறுகிறார்கள் என்பதற்காகவே நான் அவற்றை நம்புவதையே நிறுத்திவிட்டேன்,” என்றார்.

இருப்பினும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற அரசு மரியாதை விருதுகள் அவருக்கு பெருமை அளித்ததாகவும், அவை தந்தைக்கு காணிக்கை போல உணர்ந்ததாகவும் கூறினார். “அந்த விழாவில் கலந்து கொண்டபோது, என் தந்தை மேலிருந்து பார்த்து மகிழ்ந்திருப்பார் என நம்புகிறேன்,” என்றார் நசீருதீன் ஷா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bollywood Actor Naseeruddin Shah Filmfare Awards


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->