மிகுந்த அதிர்ச்சி..! ஸ்டாலின் வெளியிட்டுள்ள வருத்தமான அறிவிப்பு.!
stalin sad about ammk vetrivel death
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
stalin sad about ammk vetrivel death