வெளியான மரண செய்தி.. ஓடிச்சென்ற மு.க.ஸ்டாலின்.! வருத்தத்தில் உடன் பிறப்புகள்.!
stalin condolences ev rajan in kottiwakkam
எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் ஈ.வி.ராஜன்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குமரிப்பெண் மற்றும் பிற முன்னணி நடிகர்களின் தங்க சுரங்கம், குப்பத்து ராஜா, கல்யாண கச்சேரி மற்றும் சட்டம் சிரிக்கிறது போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பிவிஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர்தான் ஈ.வி ராஜன்.
இவருக்கு 83 வயதாகும் நிலையில் கடந்த சில வருடங்களாக இவருக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இத்தகைய சூழலில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஈ.வி. சரோஜாவின் சகோதரர்.

இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கொட்டிவாக்கம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இவி ராஜன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கே அரசியல், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளரும் முத்தமிழ் பேரவையின் பொருளாளருமான திரு. ஈ.வி.ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
English Summary
stalin condolences ev rajan in kottiwakkam