Deputy CM உதயநிதி ஸ்டாலினுக்கு இலங்கை செந்தில் தொண்டமான் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka Senthil Dhondaiman wish Deputy CM Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->