சீனா எதுவும் செய்யவில்லை., இந்தியா தான் எங்களுக்கு உதவி செய்கிறது - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை, சமையல் எரிவாயு உள்பட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டு அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, கோத்தபய ராஜபக்சே அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில்,

நான் பிரதமராக இருந்த போது இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. சொல்லப்போனால், உபரி நிதி போதுமான அளவில் இருந்தது.

நிதி சவால்களை கையாள்வதில் கோத்தபய ராஜபக்சே அரசின் திறமையின்மையால் தற்போது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இலங்கையை மேலும் சிக்கலுக்கு தள்ளும் வகையில், கோத்தபய அரசு முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிக்கிறது.

இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை இந்தியா தான் செய்துள்ளது. சீனா புதிய முதலீடுகள் எதையும் இலங்கையில் செய்யவில்லை. நிதியல்லாத நிலையில் தொடர்ந்து இந்தியா தான் இலங்கைக்கு உதவி வருகிறது" என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SriLanka ex Prime Minister press meet 


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->