சலசலப்பை ஏற்படுத்திய பேச்சு! ஜெயலலிதாவின் வரலாற்று பிழை என்ற கடம்பூர் ராஜூ!!!
speech that caused stir Kadambur Raju calls Jayalalithaas historical mistake
தூத்துக்குடி கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் ''கடம்பூர் ராஜூ'' தெரிவித்ததாவது,"1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம்.

கூட்டணி ஆட்சியிலிருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியிலுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது " என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்தில் ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ''கடம்பூர் ராஜூ'' உரையாடியது அ.தி.மு.க.வில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
speech that caused stir Kadambur Raju calls Jayalalithaas historical mistake