சட்டசபையில் 20 நிமிடங்கள் நீடித்த கூச்சல்-குழப்பம்...! - வெளிநடப்பு செய்தது எதிர்க்கட்சி திமுக...!
Shouting and chaos lasted for 20 minutes Assembly Opposition party DMK staged walkout
முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.

கூட்டத்தொடரில் காவலர்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார்.முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு, அவரது பேச்சுக்கு பதிலளிக்க தி.மு.க. உறுப்பினர்கள் அனுமதி கோரினர்.
ஆனால், முதல்-அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது இடையூறு ஏற்படுத்தியதால், உடனடியாக பதிலுரை அளிக்க அனுமதி வழங்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையைச் சுற்றி திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தி.மு.க. உறுப்பினர்களின் முழக்கங்களால் சட்டசபையில் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து அமளி நிலவியது. சபாநாயகர் சமாதானப்படுத்த முயன்றபோதும், தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர்.
இதையடுத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Shouting and chaos lasted for 20 minutes Assembly Opposition party DMK staged walkout