செந்தில் பாலாஜி தான் முதல் குற்றவாளி...! - கரூர் விவகாரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் அதிரடிப் பேச்சு...! - Seithipunal
Seithipunal


தி.மு.க. அரசைக் கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.

அவர் தனது பேச்சில், "6 மாவட்டங்களில் த.வெ.க. நடத்திய பிரசாரக் கூட்டங்கள் அமைதியாக நடந்த நிலையில், கரூரில் மட்டும் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், கரூர் பெருந்துயர வழக்கில் தமக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டது ஏன் என வினவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் அந்த வழக்கின் முதல் குற்றவாளி என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கரூரில் திட்டமிட்டுப் பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தி.மு.க. அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthil Balaji Prime Accused TVK General Secretary Delivers Fiery Speech Karur Issue


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->