பரபரப்பு பேச்சு! ஓரணியில் நானா...? No... திமுகவை எதிர்க்கும் ஒரே அணி என் கட்சி தான்...! - சீமான்
Sensational talk Am I on the sidelines No My party is the only team opposing DMK Seeman
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான ''எடப்பாடி பழனிசாமி'' அவர்கள், தி.மு.க.விற்கு எதிரான அணிகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 'சீமான்'அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது," தி.மு.க.விற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, தி.மு.க.வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம்.
தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்வார்களா? தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?
எந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை தி.மு.க. எதிர்க்கிறது. இந்திய நிலப்பரப்பில் 81% நிலக்கரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது.
போர் நடந்த இடத்தில் கூட மீள்குடியேற்றம் செய்துவிட முடியும். ஆனால் நிலத்தின் வளத்தை எடுத்து விட்டால் அது சுடுகாடாகி விடும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sensational talk Am I on the sidelines No My party is the only team opposing DMK Seeman