வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம்: பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் அறிக்கை..!
Election Commission takes action by deleting names of 51 lakh voters in Bihar
பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி வரும் ஜூலை 25-ஆம் தேதி உடன் நிறைவு பெறவுள்ளது.
பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, இதுவரை 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 07 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதன்படி, 51 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 01-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், இந்தப் பட்டியலில் அனைத்து தகுதி உள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை எனவும், முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து சேர்க்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கும், அதனை சரி செய்வதற்கும் போதுமான நேரம் இருக்கிறது என்றும், வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வெளிப் படையானதாக இருக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
English Summary
Election Commission takes action by deleting names of 51 lakh voters in Bihar