கண்கொள்ளாக் காட்சியா இருக்கு.. ரெய்டு தொடர்ந்து நடக்கணும்..!!.- செல்லூர் ராஜூ, அதிமுக..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பரவை பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இன்று நடைபெறும் வருமானவரித்துறை ரெய்டுகளை பார்த்தால் தமிழகத்தில் முதலீடு செய்தால் மாட்டிக்கொள்வோமோ என பயந்து வெளிநாட்டில் முதலீடு செய்யலாம் என்று ஸ்டாலின் சென்றுள்ளார். இதை தான் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறினார். இந்த அரசு முழுமையாக விளம்பர அரசு நமக்கான திட்டங்கள் எதையும் தரமாட்டார்கள்.

மது விலக்கு என்கிற பெயரில் மதுபான விற்பனை நடக்கிறது என்று மக்களே இன்று பேச தொடங்கி விட்டனர். திமுக அரசு சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. முதலீடு செய்வதற்காக சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்ஜிஆர் போல விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதைப்பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவது போல தெரியவில்லை. வித விதமாக அடைகளை அணிந்து ஜப்பானை சுற்றி வருகிறார். எங்கள் ஆட்சியில் சரியாக திட்டமிட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக என்பதே வன்முறைக் கட்சி. இந்த வருமான வரி சோதனையே காலதாமதமான நடவடிக்கை தான். முன்கூட்டியே இதை செய்திருந்தால் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் இறந்திருக்கமாட்டார்கள். தமிழகத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sellur Raju opined that IT raid should continue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->