இத கவனிச்சீங்களா.. ஒரே சங்கடமா போச்சு.. கர்நாடக அரசுக்கு செல்லூர் ராஜு கண்டனம்..!!
Sellur Raju condemns Karnataka govt for insulting CM MKStalin
மதுரையில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரமான செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் இந்தியாவிலும் ஆட்சி அமைக்கும் என கூறுகிறார்கள். கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதுக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு "பொதுவாக அகில இந்திய கட்சிகள் வழக்கமாக சொல்வது தான். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நம்முடைய முதலமைச்சர் பார்த்திருப்பீர்களா..? பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இன்னொன்றாக அவரை தள்ளி விட்டுள்ளனர்.

ஒரு முதலமைச்சருக்கு இவ்வாறு நடந்திருப்பதை கர்நாடக அரசு தமிழர்களை எவ்வாறு புறக்கணிக்கிறது, தமிழக மக்களை எவ்வாறு புறக்கணிக்கிறது என்பது தெளிவாகிறது. எங்கள் முதலமைச்சருக்கு இப்படி ஒரு அவமரியாதை ஏற்படுத்திய கர்நாடக அரசை கண்டிக்கிறேன். அவர் திமுக தலைவராக இருப்பதனால் மட்டுமல்ல தமிழகத்தின் முதலமைச்சர், எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக சென்றுள்ளார்.
அவரை பதவியேற்பு விழாவில் தள்ளிவிட்டது பார்த்தால் சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Sellur Raju condemns Karnataka govt for insulting CM MKStalin