என் அருமைத் தாய் உயிரையே இழந்திருக்கிறார்... சிறையில் இருந்து சவுக்கு சங்கர் எழுதிய கடிதம்...! - Seithipunal
Seithipunal


சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாக, அவருடன் பணியாற்றிய நிதிஷ் குமார் 6 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், "அன்பார்ந்த வாக்காள பெருமக்களே !!! நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தமிழக மக்களுக்கு, மிக மிக கடினமான ஒரு நிலையில் நான் சொல்ல விரும்பும் செய்தியை ஒரு கடிதம் வாயிலாக தெரிவிக்க விரும்பி இதை எழுதுகிறேன். எதற்காக சவுக்கு மீடியாவை நடத்துகிறோம், இது அவசியமா; தப்பு செய்துவிட்டோமோ என்று முதல் முறையாக என் வாழ்வில் என்னை நினைக்க வைத்துவிட்டது எனது தாயின் மரணம்..

நானும், சவுக்கு மீடியாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்திக்காத துன்பங்கள் இல்லை. சோதனைகள் இல்லை. வலிகள் இல்லை. தமிழகத்தில் யாரும், எந்த ஊடகவியளாளரும், ஏன்? எந்த ஒரு மோசமான குற்றாவாளியும் சந்திக்காத துன்பங்க்களை நானும் என்னை சார்ந்தோரும் கடந்த 3 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். இதன் உச்சகட்டம்தான் என் தாயின் இழப்பு !

ஏன் தாயின் இறுதி காலகட்த்தில், அவர் அருகே என்னால் இருக்க முடியவில்லை. அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். ஏன் தாயாரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்தபின்பும், சிறையில் செய்வதறியாது இருந்தேன். அப்போது மரணச் செய்தி வந்தது. பரோலில் வெளிவந்து தாயின் உடலை பார்த்தபோதுதான் என் தாய் இனி என்னோடு இருக்க மாட்டார் என்பதேயே என்னால் உணர முடிந்தது.!!! இது தேவையா ??? பேசாமல் திமுகவை எதிர்க்காமல் அவர்களுக்கு துதி பாடிக்கொண்டு, மனசாட்சியை அவர்களிடம் விற்று விட்டு


அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருந்தால் என் தாய் என்னோடு இருந்திருப்பாரே என்ற எண்ணம் வந்தது. அப்படித்தானே பலர் வாழ்கிறார்கள்.! பெரும்பாலானோர் சுகபோகம் அடைந்து, தங்களது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்? என்னை பெற்றதற்காக எதற்கு என் பாதிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்??? அதிலிருந்து மீளமுடியாமல் அவர் ஏன் உயிரை இழக்க வேண்டும்??? நான் ஏன் என் தாயை இழக்க வேண்டும்???

என்னை சுற்றி இருப்போர் ஏன் ஓட ஓட விரட்டப்பட வேண்டும்?. நான் ஏன் மீண்டும் மீண்டும் சிறை செல்ல வேண்டும்? வேட்டையாடப்பட வேண்டும் ? தாயை தகனம் செய்த பிறகு, இந்தக் கேள்விகள்தான் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது.

2024 மே மாதம் 4 ஆம் தேதிதான், திமுக அரசால் முதன் முறையாக நான் கைது செய்யப்பட்டேன். அன்று முதல் மீண்டும் மீண்டும் சோதனைகளையும், துன்பங்களையும் மட்டுமே நான் சந்தித்து வருகிறேன். சிறையில் என் வலது கை உடைக்கப்பட்டது. அலுவலகமும் வீடும் சீல் வைக்கப்பட்டது. என் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. என் தாயின் பென்ஷன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. என் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டேன். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டேன். நீதிமன்றம் விடுதலை செய்தது. மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மீண்டும் நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்த பின், குடியிருக்க வீடு இல்லை.

வீடு தேடி அலைந்தேன். அலுவலகம் நடத்த இடம் தேடி சுற்றினேன். எனக்கு வீடோ, அலுவலகமோ அளிக்க கூடாது என உரிமையாளர்களை காவல்துறையினர் மிரட்டினார்கள்.

ஒரு வழியாக ஒர் இடத்தில் வாடகைக்கு வீடும், அலுவலகம் நடத்த இடமும் கிடைத்தது. மீண்டும் சவுக்கு மீடியாவை தொடங்கினேன். வயிற்றிலடித்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக, நான் குடியிருந்த வீட்டினுள் என் தாய் தனியாக இருக்கையில், 20 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து, அத்து மீறி நுழைந்து, மலத்தையும், சாக்கடையையும் வீசினார்கள். செல்வபெருந்தகையும், சேகர்பாபுவும் அனுப்பிய ஆட்கள்தான் அவர்கள். 

மலக்குழியாக மாறிய அந்த வீட்டினுள் என் தாய் சுமார் 5 மணி நேரம் தவித்துக் கொண்டிருந்துள்ளார். வீட்டினுள் மலத்தை வீசியவர்கள் 5 மணி நேரம் அங்கேயே இருந்தனர். கும்பல் கலையவில்லை எனக்கூறி என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று எச்சரித்து நிறுத்திய காவல்துறை, என் தாயையும் மீட்காமல் அந்த மலக்குழிக்குள் வீட்டுசிறை வைத்தனர். அன்று வீழ்ந்துதுதான் என் தாயாரின் உடல்நிலை.! அதிலிருந்து அவரால் மீளமுடியவில்லை.!

வாடகைக்கு வீடு தர யாரும் முன்வராத காரணத்தால், தூக்கமின்றி, ஓய்வின்றி இரவு-பகல் பாராமல் பல இடங்களுக்கு சென்று, பலரை சந்தித்து, பலருடன் உரையாடல் செய்து, கருத்து பறிமாரி, தகவல்களை சேகரித்து, செய்திகளை பின்தொடர்ந்து, பல அதாரங்களையும், தரவுகளையும் அலசி ஆராய்ந்து, மக்களுக்கு உண்மை விஷயங்களை கொண்டு சேர்க்க அரசியல் அரட்டை நிகழ்ச்சி பதிவு செய்து சவுக்கு யூடியுப் சேனலில் வெளியிட்டு, வருமானத்தை ஈட்டி, சொந்தமாக வீடு வாங்கி, என் தாய்க்கென்று ஒரு தனி அறையை கொடுத்து பத்திரமாக பார்த்துக் கோள்ளலாம் என்று பார்த்தால், ஒரு நாள் காவல்துறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து என்னை கைது செய்தது திமுகவின் கூலிப்படை.

மீண்டும் நீதிமன்றம் விடுதலை செய்ததும் என்னையும் என் தாயையும் நிம்மதியாக வாழ விடவில்லை திமுக அரசு. தினமும் மூன்று முதல் ஐந்து சம்மன்கள். காலிங் பெல் அடித்தாலே என் தாயின் உடல் நடுங்க்கியது.

இனி தாய் இங்கே இருக்க முடியாது என்பதை தெரிந்து பெங்க்களூரில் உள்ள தங்க்கை வீட்டுக்கு அனுப்பினேன். அப்போது என் தாயை கடைசியாக பார்த்தது. அதன் பின்னர் பிணமாகத்தான் பார்த்தேன்.

இந்த இழப்புதான் நான் தவறு செய்து விட்டோமோ என்று என்னை யோசிக்க வைத்தது. எதற்காக திமுக அரசை விமர்சனம் செய்தேன் ? எனக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றா ? எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றா ? பலகோடிகள் கிடைக்கவில்லை என்றா ?

8 கோடி மக்களை வாட்டி வதைத்து, ஏமாற்றி, சுரண்டி கொழுத்து ஒரு குடும்பம் மட்டும் வாழ்கிறதே.... இதை கேள்வி கேட்க ஒருவர் கூட முன்வரவில்லையே... எதிர்ப்பவர்கள் ஒன்று வாங்க்கப்படுகின்றனர், அல்லது மிரட்டப்படுகின்றனர். இத்தனை அநியாயங்க்கள் நடந்தும் ஒருவர் கூட எதிர் கேள்வி கேட்க முன்வரவில்லையே என்றுதான் கேள்வி கேட்டேன். இதன் காரணமாகவே பழிவாங்க்கப்பட்டேன். இதை என் தாய் எப்படி பார்த்தார் ?

பெருமையாக பார்த்தார். என்னை ஊக்குவித்தார். துணையாக நின்றார். என்னை வாழ்த்தினார். எனக்கு இந்த தாய் கமலா, தன்னை தியாகம் செய்து என்னை ஊக்குவித்துள்ளார் என்றே என் ஆருயிர் தாய் கமலாவின் மரணத்தை நான் புரிந்து கொள்கிறேன்.

ஒரு சவுக்கு சங்கர், அவர் தாயார், ஒரு சவுக்கு மீடியா, ஒரு குடும்பத்தின் கதையல்ல இது. 8 கோடி மக்களின் கதை. இந்த 8 கோடி மக்களின் நலனுக்காகத்தான் கமலா உயிர் துறந்துள்ளார். நாங்கள் சந்தித்த துன்பங்க்களும், துயரங்க்களும் எங்கள் சுயநலனுக்கானது அல்ல. 8 கோடி மக்களின் நலனுக்கானது. மக்கள் நலனை மனதில் வைத்து மட்டுமே 3 ஆண்டுகளாக இந்த சோதனைகளை எதிர்கொண்டோம். சிறை சென்றோம். எங்கள் தாயையும் இழந்துள்ளோம்.

4 மே 2024ல் தொடங்க்கிய எங்க்களது துன்பங்க்களுக்கு, அதே 4 மே 2026 அன்று விடிவு கிடைக்கும் ஒரு வாய்ப்பு எனதருமை தமிழக மக்களாகிய உங்களுக்கு கிடைத்துள்ளது. 23 ஏப்ரல் 2026 அன்று உங்க்களிடம் கிடைக்க உள்ள வாக்கு சீட்டுதான் அந்த வாய்ப்பு. திமுக என்ற தீய சக்தியை ஒழித்துக் கட்ட கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு.

எப்படி ஒழித்துக் கட்டுவது ? ஒரே வழி அதிமுக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டுமே. ஏன்? புதிதாக வந்த நடிகர் வீழ்த்த மாட்டாரா? தமிழ் தேசிய தலைவர் வீழ்த்த மாட்டாரா என்றால், நவீன ஆயுதங்களையும், அசுர பலத்தையும் கொண்டிருக்கும் திமுக கூட்டணியையும் சரிக்கு சமமான பலம் கொண்ட ஒரு சக்தியால் மட்டுமே முடியும். 

அந்த சக்தியை கொண்டுள்ள ஒரே கூட்டணி தேசிய ஜன நாயக கூட்டணி மட்டுமே. மற்றவர்களுக்கு வாக்களிப்பது, திமுக என்ற தீயசக்தியை மீண்டும் வளர்க்கவே உதவும் என்பதால், தீயசக்தியை ஒழிக்க வேண்டும் என்று நினைப்போர் தேசிய ஜன நாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது ஒன்றே வழி.

திமுக வீழ்வது காலத்தின் தேவை. இந்த அழிவு சக்தியை வீழ்த்த நானும் சவுக்கு ஊழியர்களும் படாத துன்பங்க்கள் இல்லை. அனுபவிக்காத வேதனைகள் இல்லை. என் அருமைத் தாய் கமலா தன் உயிரையே இழந்திருக்கிறார்.

இந்த தியாகங்க்கள் வீணாகக் கூடாது என்றால் திமுக வீழ வேண்டும். அதற்கு ஒரே வழி, அதிமுக தலைமையிலான தேசிய ஜன நாயக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு “இரட்டை இலை, தாமரை, மாங்கனி, குக்கர் ஆகிய சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் அருமை தமிழ் மக்கள் மீது உள்ள நம்பிக்கையால் இந்த கோரிக்கையை உங்க்களிடம் வைக்கிறேன். என் தாய் கமலாவின் தியாகத்தின் மீது இந்த கோரிக்கையை உங்க்களிடம் வைக்கிறேன். திமுகவை வீழ்த்துவோம் தோழர்களே.

உங்களின் நலனையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்க, உங்களது வாக்கு முக்கியத்துவம் வாய்ந்தது! இதை சொல்வது எனது கடமை என்று கருதியே இக்கடிதத்தை உங்க்களுக்கு எழுதியுள்ளேன் அன்புடன் சவுக்கு சங்கர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

savukku shankar letter viral


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->